கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ‘கலர்ஸ் கிச்சன்’ என்ற சமையல் பயண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.
சமையல் கலை நிபுணரான செஃப் தாமு அந்நிகழ்ச்சியில் முதன்மை முகமாகப் பங்கேற்கிறார். செஃப் ஸ்ரேயா அட்கா சிறப்புப் பகுதி ஒன்றை நிகழ்ச்சியில் வழங்குகிறார். ஆர்ஜே ஸ்ரீரஞ்சனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு வாரமும் செஃப் தாமு நாம் வீட்டிலேயே செய்து பார்க்கும் வகையிலான உணவுகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அவர் பயணித்த ஊர்களின் சிறப்பான சமையல் வகைகளைப் பற்றியும், அவற்றைச் செய்ய பயன்படுத்தக் வடிய பொருட்களைப் பற்றியும் விளக்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் பிரபலங்களும் கலந்து கொண்டு அவர்களுக்குத் தெரிந்த சமையல் வகைகளைச் செய்து காட்ட உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.