விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து டிவி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் சித்ரா.
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து பிரபலமான டிவி நடிகையாக உயர்ந்தார்.
இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தங்கள் மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாக காவல்துறையில் சித்ராவின் அப்பா புகார் அளித்துள்ளார்.
சித்ராவின் திடீர் மரணம் டிவி பிரபலங்களிடம் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகைகள் பலரும் சித்ரா மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆத்மிகா, ஆ உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து
ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள் சித்ரா என தங்களது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்கள்.
தன்னுடைய தமிழ் உச்சரிப்பாலும், தைரியமான செயல்களாலும் அறியப்பட்டவரின் மரணம் பலரையும் உலுக்கியுள்ளது