விஜய் டிவியில் அக்டோபர் 9ம் தேதி முதல் ‘பிக் பாஸ் சீசன் 6’

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 

முதல் சீசன் ஆரம்பமான 2017ம் ஆண்டு முதல் நடிகர் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டிற்கான 6வது சீசன் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளிவந்த நிலையில், நிகழ்ச்சியில் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்கள்.

இந்த சீசனில் எத்தனை போட்டியாளர்கள், யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது நிகழ்ச்சி ஆரம்பமாகும் போதுதான் அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும்.