விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
கடந்த 5 வருடங்களாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த வருட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான முன்னோட்ட வீடியோக்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்த சீசனுக்கான வீட்டின் தோற்றத்தைப் பார்க்க நேற்று பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சீசனுக்காக பிக் பாஸ் வீட்டின் தோற்றத்தை வண்ண மயமாக புதுப் பொலிவுடன் மாற்றியுள்ளனர். கடந்த சில சீசன்களாக உபயோகத்தில் இல்லாமல் இருந்த நீச்சல் குளம் இந்த வருடம் உபயோகத்தில் வர உள்ளது. வீட்டினுள்ளும் சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.
இந்த வருட சீசனில் பிரபலங்களுடன் பொதுமக்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பங்கேற்க உள்ளார்.
இந்த வருட நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 முதல் 11 மணி வரையிலும் பார்க்கலாம்.
அது மட்டுமல்லாது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளார்கள்.