ஜீ 5 - பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘அனந்தம்’ இணைய தொடர்

ஹேப்பி யூனிகார்ன் சார்பில்  முரளிராமன் தயாரிக்க, பிரியா இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘அனந்தம்’.

1964 முதல் 2015 வரையிலான கால கட்டங்களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இத்தொடர் எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. ‘அனந்தம்’ என்பது ஒரு வீட்டின் பெயர். 

 வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடராகும். ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது, அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின்,  ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் கதை.

பிரகாஷ் ராஜ் முதன்மைக் கதாபாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஜீ 5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 22ம் தேதி இத்தொடர் வெளியாகிறது.