அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 19ல் வெளியாகும் ‘அம்மு’

சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கும் ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்க அமேசான் ஒரிஜனல் திரைப்படமாக 240க்கும் மேற்பட்ட நாடுகளில் அக்டோபர் 19 வெளியாக உள்ளது ‘அம்மு’ திரைப்படம்.

தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

சாருகேஷ் சேகர் எழுதி இயக்க, ஐஸ்வர்ய லட்சுமி, நவீன் சந்திரா, சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை கல்யாண் சுப்பிரமணியன், கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குனர் சாருகேஷ் சேகர் கூறுகையில்,

‘‘அம்மு என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவள். தன்னை ஒடுக்குபவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கற்றுக் கொண்ட அம்முவின் திரைப்படப் பயணம், பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும். ஐஸ்வர்யா, நவீன் மற்றும் சிம்ஹா ஆகிய நடிகர்களின் அற்புதமான நடிப்பு இல்லாமல் எங்களால் இதைச் சாதிக்க முடியாது. என் மீதும் எனது குழு மீதும் நம்பிக்கை வைத்த கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பிரைம் வீடியோ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கல்யாண் சுப்ரமணியன் கூறுகையில்,
“புத்தம் புது காலை’க்குப் பிறகு ஸ்டோன் பெஞ்ச், அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்து செயல்படும் இரண்டாவது படம் இது. இதைவிட சிறந்த கதையை நாங்கள் கேட்டிருக்க முடியாது. நாங்கள் எப்பொழுதும் ஈர்க்கக்கூடிய ஆனால் நல்ல கதை அம்சம் சார்ந்த கதைகளையே தயாரிக்கிறோம். அம்மு இரண்டு வகைகளிலும் அடங்கும். இப்போது, அம்மு வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதால், பிரைம் வீடியோ மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு எங்கள் அன்பின் உழைப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், 

“ஒரு தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் பாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் தொடர்பு கொள்ள நிறைய இருக்கிறது. ஒருவரின் உண்மையைப் பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் அதில் மிக முக்கியமானது.  கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச், இயக்குநர் சாருகேஷ் சேகர், எனது சக நடிகர்கள் நவீன் மற்றும் சிம்ஹா மற்றும் பிரைம் வீடியோவில் உள்ள குழுவினரின் நிலையான ஆதரவிற்கு நான் நன்றி சொல்கிறேன். அம்முவுக்கான ஆதரவைப் பார்க்க ஆவலாக உள்ளேன்,”என்றார்.

நவின் சந்திரா கூறுகையில்,

“அம்முவின் கணவர் ரவி கதாபாத்திரத்தின் மனநிலையைப் புரிந்துகொள்வது சவாலாக இருந்தது. சாருகேஷ், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக, பார்வையாளர்களின் மனதில் ஊடுருவும் ஒரு கதையை சிறப்பாகப் பின்னியுள்ளார். சாருகேஷ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகியோர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனது நடிப்பை எளிதாக்கியது,” என்றார்.

சிம்ஹா கூறுகையில்,
 
“கதையைக் கேட்ட மறுநிமிடம் அம்மு என்பது நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய படமாக மாறியது. ஐஸ்வர்யா மற்றும் நவீன் இருவரும் மிகவும் வலிமையான நடிகர்கள். அவர்கள் திரையில் நடிக்கும்போது உங்கள் கண்களைத் திருப்ப முடியாது. சாருகேஷ் கடைசி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் கதையை எழுதியிருக்கிறார்,” என்றார்.