ஆஹா ஓடிடி - தொகுப்பாளராக அடியெடுத்து வைக்கும் ஜீவா

ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

டிஜிட்டல் தளங்களில் வலைதளத் தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதனால், இந்த ‘சர்க்கார் வித் ஜீவா’ நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறது ஆஹா.

இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் ஜீவாவைச் சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா ? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா ? என்பது தான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. 

பிரம்மாண்டமான அரங்கம் - பிரபலமான போட்டியாளர்கள் - புதிய தோற்றத்தில் ஜீவா - என இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.