வி 1 மர்டர் கேஸ் - விமர்சனம்

26 Dec 2019
கதை ‘லிவிங் டு கெதர்’ முறையில் இருக்கும் லிஜேஷ் உடன் வசிக்கும் காயத்ரி வீட்டிற்கு வரும் வழியில் கொல்லப்படுகிறார். கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகள் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளை களம் இறங்குகிறார்கள். இதனிடையே லிஜேஷ் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து காயத்ரிக்கு காதல் தொல்லை கொடுத்த லிங்கா, காயத்ரி வீட்டருகில் உள்ள ஒரு இளைஞர், செயின் திருட்டு செய்யும் பணக்கார வீட்டு சிறுவன் போலீஸ் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். உண்மைக் குற்றவாளி யார் என்பதை ராம், விஷ்ணுப்ரியா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நடிப்பு ஒரு மிடுக்கான, தன் திறமை மீது அதிக நம்பிக்கை கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார் ராம் அருண் காஸ்ட்ரோ. நாயகி என்றால் காதலியாகவும், மனைவியாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன ?. சக தோழியாகவும் இருக்கலாமே. அப்படி ஒரு தோழியாக இருக்கிறார் விஷ்ணுப்ரியா பிள்ளை. வேலை செய்யும் இடத்தில் இப்படி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். விசாரணை குற்றவாளிகளாக, வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக செய்திருக்கிறார்கள். இசை, மற்றவை ஒரு த்ரில்லர் படத்திற்கு பின்னணி இசை முக்கியம். அதை உணர்ந்து செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ரோனி ரபேல். த்ரில்லர் படங்களில் ஒளி அமைப்பும், ஒளிப்பதிவும் முக்கியத்துவம் பெறும். அது கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு மூலம் கிடைத்திருக்கிறது.

+

பரபரப்பான திரைக்கதை...

-

நாயகியின் கிளாமர் உடை  

Share via: