தீதும் நன்றும் - விமர்சனம்

15 Mar 2021

அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் தானே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இது. வட சென்னை பகுதியை கதையின் களமாக வைத்து யதார்த்தமான ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ராசு ரஞ்சித், ஈசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்களுடன் சந்தீப் ராஜ் உடன் இணைந்து இரவு நேரங்களில் பணத்தைக் கொள்ளையடிக்கும் திருட்டு வேலையைச் செய்கின்றனர். ஈசன் அவரது காதலியான அபர்ணா பாலமுரளியைத் திருமணம் செய்து கொள்கிறார். பின்னர், தான் கர்ப்பமானதால் ஈசனை அப்படி கொள்ளை வேலைக்குச் செல்லத் தடுக்கிறார். ஆனால், மனைவியின் பேச்சை மீறிச் சென்று போலீசிடம் மாட்டிக் கொள்கிறார். ராசு ரஞ்சித், ஈசன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட, சந்தீப் தப்பித்து விடுகிறார். ஒரு வருட தண்டனைக்குப் பிறகு வெளியில் வரும் ராசு ரஞ்சித், ஈசன் ஆகியோரைச் சந்திக்கும் சந்தீப் எப்படியோ அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் ஒரு கொள்ளை வேலைக்கு அழைக்கிறார். அப்படிச் செல்லும் போது சந்தீப் சூழ்ச்சியால் ஈசன் கொல்லப்பட, ராசு ரஞ்சித் தப்பிக்கிறார். தன் நண்பன் ஈசன் கொலைக்குக் காரணமான சந்தீப்பைக் கொல்லத் துடிக்கிறார் ராசு ரஞ்சித். முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

புதுமுக நடிகர்கள் என்பதால் படம் பார்க்கும் போது சினிமா பார்க்கும் உணர்வை விட வட சென்னைப் பகுதியில் அவர்களுடன் கூடவே செல்வது போல கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். அவர், ஈசன், சந்தீப் ராஜ், ஆகியோர் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் இருவரது கதாபாத்திரங்களும் அதில் அவர்களது நடிப்பும் அவ்வளவு பொருத்தமாக உள்ளது. இப்படிப்பட்ட படத்தைப் பற்றி அவர்கள் ஓரிரு வார்த்தை கூட பிரமோஷனுக்காக வராதது சிறிய படம் மீதான அவர்களது எண்ணம் தவறானது என்பதை காலம் தீர்மானிக்கும்.

சத்யாவின் பின்னணி இசை, கெவின் ராஜ் ஒளிப்பதிவு, ராசு ரஞ்சித்தின் படத்தொகுப்பு அனைத்துமே படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

இது போல சிறிய படமாக இருந்தாலும் சிறந்த படமாக அமையும் படங்களை சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் பார்த்து ஆதரிக்க வேண்டு

Tags: theethum nandrum, rasu ranjith, eesan, sathya, aparna balamurali, lijomol jose

Share via: