சூப்பர் டூப்பர் - விமர்சனம்

21 Sep 2019
கதை போதைப் பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரின் மகளான இந்துஜாவை தவறுதலாகக் கடத்துகிறார்கள் துருவ், ஷாரா. தங்கள் தவறை உணரும் சமயம் இந்துஜாவின் அப்பா கொல்லப்படுகிறார். இந்துஜாவுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. தன் அப்பாவைக் கொன்றது யார் ?, தன்னை யார் மிரட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்துஜா, துருவ்வின் உதவியைக் கேட்கிறார். அதன்பின் அவர்கள் இந்துஜாவின் கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நடிப்பு நாயகன் துருவ் அவருடைய மாமா ஷாராவுடன் சேர்ந்து சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுகிறார். சராசரியான ஒரு இளைஞர் கதாபாத்திரம்தான். நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான காட்சிகள் எல்லாம் அவருக்கு இல்லை. கதாபாத்திரத்திற்கேற்றபடி கேஷுவலாக நடித்திருக்கிறார் துருவ். ஷாரா காமெடி என்ற பெயரில் கொஞ்சம் சோதிக்கிறார். இந்துஜாவுக்குத்தான் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு. ஒரு பக்கம் அப்பா மரணம், தன்னைத் துரத்தும் மரணம், அவற்றிற்கான விடையைக் கண்டு பிடிக்கும் துடிப்பு என கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஈடு கொடுக்கிறார். இசை, மற்றவை இந்த மாதிரி சிறிய ஹீரோக்களின் படங்களுக்கு பாடல்கள் ஹிட்டாவது மிகவும் முக்கியம். சிறிய படங்களின் இசையமைப்பாளர்கள் அதை கவனத்தில் கொள்வது அவசியம்.

+

படத்தின் திரைக்கதையில் உள்ள டிவிஸ்ட்கள்...யூகிக்க முடியாத அளவிற்கு திருப்பங்களாக அமைந்துள்ளன.

-

படத்தின் மைனஸும் அதுவே. நிறைய திருப்பங்கள் உள்ளதால் தொடர்புபடுத்தி பார்க்க சிரமமாக உள்ளது.

Tags: super duper

Share via: