பப்பி - விமர்சனம்

13 Oct 2019
கதை கல்லூரியில் படிக்கும் இளைஞர் வருண். ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்டவர். கல்லூரி வகுப்பில் அதைப் பார்த்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். திருமணத்திற்கு முன்பே பெண் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர்களது வீட்டு மாடிக்கு குடி வரும் சம்யுக்தாவிடம் பழகி காதலிக்கவும் செய்கிறார். ஒரு நாள் இருவரும் கட்டிலையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் கர்ப்பம் ஆகிறார் சம்யுக்தா. அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட நினைக்கிறார் வருண். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு இப்படியான படங்களில் நடித்தால் பெயர் வாங்கிவிடலாம் என வருணுக்கு யார் சொன்னது எனத் தெரியவில்லை. இருந்தாலும் அப்படி பெண் சுகத்திற்காக அலையும் இளைஞன் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் சீனியர் ஆக யோகிபாபு. இவர் இருப்பதால் படம் முழுவதும் கலகலப்பாக நகர்கிறது. வருண் காதலியாக சம்யுக்தா. மதுரையிலிருந்து சென்னைக்கு வருபவர், உடனே வருணைக் காதலிப்பது நம்பும்படி இல்லை. இருந்தாலும் தான் கர்ப்பமடைந்ததை நினைத்து கலக்கமடைந்தாலும் அதைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடிக்கிறார். பப்பி என்ற நாயாக பிங்கி. அந்த நாய் கதாபாத்திரத்தை வைத்துதான் தாய்மையின் பெருமையை நாயகனுக்குப் புரிய வைக்கிறார்கள். இசை, மற்றவை தரண்குமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. யுவன், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பாடியிருக்கிறார்கள்.

+

கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே படத்துக்குப் பெருமை

-

இந்தக் காலத்தில் சில இளைஞர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டுவது ?.

Share via: