ஜீ தமிழ் - புதிய நிகழ்ச்சி ‘ஜீ சூப்பர் பேமிலி’
06 Oct 2020
ஜீ தமிழ் டிவியில் ‘மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் கில்லாடி’ முதல் ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்’ வரை பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை.
அதோ போன்றதொரு நிகழ்ச்சியாக ‘ஜீ சூப்பர் பேமிலி’ என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறு முதல் ஆரம்பித்துள்ளார்கள்.
‘செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சத்யா, நீதானே எந்தன் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை, ராஜா மகள், ரெட்டை ரோஜா, சூர்ய வம்சபம், என்றும் புன்னகை’ போன்ற தொடர்களின் நட்சத்திரங்கள் இடையே நடக்கும் ஒரு போட்டி நிகழ்ச்சி இது.
ஒவ்வொரு வாரமும் இரண்டு தொடர் நட்சத்திரங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வர். சுவாரசியமும், நகைச்சுவையும் கலந்த சுற்றுக்கள் இந்நிகழ்ச்சியில் உள்ளன.
ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழஙகப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்குகிறார்.
Tags: zee tamil, zee super family, super family