ஜீ தமிழ் - ஜுலை 27 முதல் மீண்டும் டிவி தொடர்கள் ஆரம்பம்

20 Jul 2020

கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சினிமா, டிவி டப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த மாதம் டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு  அனுமதி அளித்தது. அதன்பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஆரம்பமான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

தற்போது மீண்டும் டிவி தொடர் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி உள்ளன. 

ஜீ தமிழ் டிவிவியில் ஜுலை 27ம் தேதி முதல் புதிய அத்தியாயங்களுடன் டிவி தொடர்களின் ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளார்கள்.

அரசு அறிவித்த பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடித்து அத் தொடர்களை தற்போது படமாக்கி வருகிறார்களாம். 

மேலும், டிவி துறையைச் சார்ந்த தினசரி ஊதியம் பெறும் 400 தொழிலாளர்களின் நலனுக்காக நிதியுதவி வழங்கவும் சேனல் முயற்சிகளை எடுத்து வருகிறதாம்.

ஜுலை 27 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ள தொடர்கள்...
 
ரெட்டை ரோஜா– 1:30 – 2:00 pm

என்றென்றும் புன்னகை – 2:00 – 2:30 pm

ராஜாமகள் –2:30 – 3:00 pm

நீதானே எந்தன் பொன்வசந்தம் – 7:00 – 8:00 pm

கோகுலத்தில் சீதை – 8:00 – 8:30 pm

யாரடி நீ மோகினி – 8:30 – 9:00 pm

செம்பருத்தி – 9:00 – 9:30pm

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி– 9:30 – 10:00 pm

சத்யா – 10:00 – 10:30 pm

Tags: zee tamil, zee tv,

Share via: