ஜீ தமிழ் - மார்ச் மாதம் வரை ‘மகா சங்கமம்’
20 Jan 2021
2021ம் வருடத்தை புதுமையான உள்ளடக்கங்களுடன் ஆரம்பித்தது ஜீ தமிழ் டிவி.
‘திரிவேணி சங்கமம்’ என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ‘ரெட்டை ரோஜா, என்றென்றும் புன்னகை, ராஜா மகள்’ ஆகிய மூன்று தொடர்களை ஒன்றிணைத்து ஒளிபரப்பியது.
அதற்கு டிவி நேயர்களிடையே நல்ல வரவேற்பும், சேனலுக்கு நல்ல ரேட்டிங்கும் கிடைத்தது.
தற்போது ‘மகா சங்கமம்’ என்ற பெயரில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சத்யா’ ஆகிய தொடர்களை ஒன்றிணைத்து ஒளிபரப்பி வருகிறது. ஜனவரி 9 முதல் ஜனவரி 22 வரை தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, மார்ச் மாதம் இப்படி மற்ற தொடர்களையும் ஒன்றிணைத்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.
‘நீதானே எந்தன் பொன்வசந்தம், சூர்ய வம்சம்’ ஆகிய இரண்டு தொடர்களையும் இணைத்து ‘மகா சங்கமம்’ ஜனவரி 25 முதல் பிப்ரவரி 7 வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
அதற்குப் பிறகு ‘கோகுலத்தில் சீதை, யாரடி நீ மோகினி’ ஆகிய தொடர்களை இணைத்து பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 19 வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
பின்னர் ‘யாரடி நீ மோகினி, செம்பருத்தி’ ஆகிய தொடர்களை இணைத்து பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை இரவு 8.30 முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்களாம்.
Tags: zee tamil, zee tamil tv, ஜீ தமிழ், ஜீ தமிழ் டிவி