ஜீ தமிழ் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
11 Nov 2020
ஜீ தமிழ் டிவியில் நவம்பர் 14, சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புத் திரைப்படங்கள்.
காலை 9 மணி
குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப விருதுகள்
2020 ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. அஞ்சனா, நீலிமா ராணி தொகுத்து வழங்குகிறார்கள்.
காலை 11 மணி
நான் சிரித்தால் - திரைப்படம்
ஆதி, ஐஸ்வர்யா மேனன், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்த புத்தம் புதிய திரைப்படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.
பிற்பகல் 2 மணி
சிங்கிள்ஸ் V/s மிங்கிள்ஸ்
ஜீ தமிழ் நட்சத்திரக் குடும்பங்கள் பங்கு பெறும் சுவாரசியமான சுவையான கேம் ஷோ. விஜய், கிக்கி தொகுத்து வழங்குகிறார்கள்.
மாலை 4 மணி
எனை நோக்கி பாயும் தோட்டா- திரைப்படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்த புத்தம் புதிய திரைப்படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...
Tags: zee tamil