மறுப்பு தெரிவிக்கும் யோகி பாபு...எதற்காக ?

04 Oct 2019
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் நாயகனாக நடித்த ‘தர்மபிரபு, கூர்கா’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து அவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களைக் கூட அவர்தான் நாயகன் என்பது போல விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அது பற்றி மறுப்பு ஒன்றைத் தெரிவித்துள்ளார் யோகி பாபு. "தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்களை யாரும் எழுதித் தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை,” என்று தெரிவித்துளளார் யோகி பாபு.

Share via: