தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. அடிக்கடி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் அடுத்து கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை பிரபல நடனப் பள்ளியான ராக் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.  சசிகுமார் நடித்து வெளிவந்த ‘ராஜ வம்சம்’ படத்தை இயக்கிய கதிர்வேலுவின் அடுத்த படம் இது.

இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.