டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் ‘ரைட்டர்’
13 Dec 2021
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ‘ரைட்டர்’.
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவிரிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் இது.
இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது.
Tags: Writer, Samuthirakani, Ineya, Franklin Jacob, Govind Vasantha