அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘வித் லவ்’

21 Nov 2025

சியோன் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘வித் லவ்’ படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

‘டூரிஸ்ட் பேமிலி‘ படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்ய, ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.

முழுக்க முழுக்க  இக்கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகி வருகிறது இப்படம். 

Tags: with love

Share via: