நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். 

இந்த நிறுவனம் விஷால் நடிக்கும் 32வது படத்தைத் தயாரிக்கிறது.  இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே, விஷால் தொகுத்து வழங்க சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்திருந்தார்கள். 

இவர்களது முதல் சினிமா தயாரிப்பான விஷாலின் 32வது படம் இன்று  படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.   

விஷால் நடித்த ‘சமர்’ படத்தில் நடித்த சுனைனா, இப்படத்தில் தனி கதாநாயகியாக அவருடன் ஜோடி சேருகிறார். 

வினோத்குமார் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வசனத்தை அவருடன் பொன் பார்த்திபன் இணைந்து எழுதுகிறார். சாம் சிஎஸ் இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.