ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் அர்ஜூனின் ‘விருந்து’
24 Aug 2024
நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து".
கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன்.
அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் யூகிக்க முடியாத வகையில் படமாக்கி இருப்பது இப்படத்தின் சிறப்பு.
இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
Tags: virunthu, arjun, release date