2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விருமன்’.

இப்படத்தின் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார். முத்தைய - யுவன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள்.

‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி, இயக்குனர் முத்தையா, ராஜ்கிரண் மீண்டும் இணைந்திருக்கும் படம் இது. பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.