‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

விக்ரமின் 61வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 23வது தயாரிப்பு இந்தப் படம்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.