ஸ்டார் விஜய் டிவியில் ‘BB ஜோடிகள்’, புதிய நடன ரியாலிட்டி ஷோ
30 Apr 2021
ஸ்டார் விஜய் டிவில் புத்தம் புதிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சியாக ‘BB ஜோடிகள்’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
வரும் ஞாயிறு இரவு 8 மணி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமான போட்டியாளர்கள், ஜோடிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு சுற்றுகள் மூலம் தங்களின் நடனத் திறமையை வெளிப்படுத்த உள்ளார்கள்.
ஒவ்வொரு வாரமும் நடன ஜோடிகள், சில தலைப்புகள் மற்றும் தீம்களில் பல்வேறு நடனச்சுற்றுக்களில் போட்டியிடுவர்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இடம் பெறுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் BB ஜோடிகளின் நடன மற்றும் அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரம் ஒரு ஜோடி வெளியேற்றப்பட்டு இறுதியில் 4 ஜோடிகள் பிரம்மாண்ட மேடையில் இறுதிப் போட்டியில் பங்குபெறுவர்.
ஷிவானி - சோம் சேகர், கேபிரியல்லா - ஆஜீத், அனிதா - ஷாரிக், நிஷா - தாடி பாலாஜி, வனிதா - சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ், ஜூலி - சென்றாயன், பாத்திமா பாபு - மோகன் வைத்யா ஆகியோர் நடனப் போட்டியாளர்களாக களம் இறங்குகிறார்கள்.
இந்நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ், தீனா தொகுத்து வழங்குகிறார்கள்.
Tags: vijay tv, star vijay tv, bb jodigal