விஜய் டிவியில் ‘அம்மன் திருவிழா’
03 Sep 2020
தமிழ்த் தொலைக்காட்சிகளில் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவி தனித்து நிற்கிறது.
பல்வேறு விதமான சுவாரசியமான நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
வரும் செப்டம்பர் 6ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ‘அம்மன் திருவிழா’ என்ற ஒரு கொண்டாட்டத்தை நடத்தவிருக்கிறது விஜய் டிவி.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபலமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இனி ஒவ்வொரு ஞாயிறும் இது போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாம் விஜய் டிவி.
ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும், ‘நீயா நானா, கலக்கப் போவது யாரு 9, ஸ்டார்ட் மியூசிக், மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒளிபரப்பாகி வருகின்றன.
Tags: vijay tv, amman thiruvizha