மகாராஜா’ இயக்குநரை பாராட்டிய விஜய்

19 Jul 2024

‘மகாராஜா’ இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார்கள். தற்போது ஓடிடியில் வெளியாக பல்வேறு திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள்.

இதனிடையே விஜய்யும் ‘மகாராஜா’ இயக்குநரை அழைத்து பாராட்டியிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து இயக்குநர் நித்திலன் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தச் சந்திப்புக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. ‘மகாராஜா’ படம் குறித்து நீங்கள் பேசிய விஷயங்கள் என்னை நெகிழ வைத்தது. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி அண்ணா. லவ் யூ அண்ணா”

இவ்வாறு நித்திலன் தெரிவித்துள்ளார்.

’மகாராஜா’ படத்தை தயாரித்த சுதன் மற்றும் ஜெகதீஷ் இருவருமே இந்தச் சந்திப்பில் இருந்துள்ளனர். இதில் ஜெகதீஷ் தான் விஜய்யின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: vijay, maharaja, nithilan

Share via: