திடீர் விசிட் அடித்த விஜய்: ‘கோட்’ குழு குஷி

21 Jul 2024

‘கோட்’ அலுவலகத்துக்கு திடீரென்று விசிட் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி செளத்ரி, சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

’கோட்’ படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் பணிகள் அனைத்துமே அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு டி.நகரில் அலுவலகம் அமைத்து கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதில் தான் அனைத்து பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்துக்கு இதுவரை விஜய் வந்ததே இல்லை. ஜூலை 16-ம் தேதி திடீரென்று அலுவலகத்துக்கு விஜய் விசிட் அடித்துள்ளார். அங்கு நடைபெறும் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் பார்த்து பேசிவிட்டு திரும்பியிருக்கிறார். விஜய் வருகையை மிகவும் ரகசியமாக வைத்து, பத்திரமாக அனுப்பியிருக்கிறார்கள்.

’கோட்’ படக்குழுவினர் உழைப்பைப் பார்த்து மிகவும் பாராட்டிவிட்டு திரும்பியிருக்கிறார் விஜய். இதனால் வெங்கட் பிரபு மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.

Tags: goat, vijay

Share via: