பரபரப்பு பணிகளில் ‘விஜய் 69’

18 Apr 2024

தயாரிப்பாளர் முடிவாகவில்லை என்றாலும் ‘விஜய் 69’ படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

‘கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. முதலில் இந்தப் படத்தினை டிவிவி நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் விலகிவிட்டது.

தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அல்லது பேஷன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் ‘விஜய் 69’ படத்தினை தயாரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால், எந்த நிறுவனம் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, தயாரிப்பு யார் என்பது முடிவாகவில்லை என்றாலும், கதை விவாதப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

’விஜய் 69’ படத்தின் கதையின் திரைக்கதை வடிவத்தினை கிட்டதட்ட முடித்துவிட்டார் ஹெச்.வினோத். அடுத்த சந்திப்பில் திரைக்கதை வடிவத்துடன் கதையினை சொல்லவுள்ளார். அதற்குப் பிறகே நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியவை ஒப்பந்தமாகும் எனத் தெரிகிறது.

விஜய் படம் என்பதால் தயாரிப்பாளருக்கு கவலையில்லை என்பதால், ஹெச்.வினோத் தனது பணிகளில் எந்தவித சுணக்கமும் வேண்டாம் என்று பரபரப்பாக பணிபுரிந்து வருகிறார்.

Tags: vijay, h vinoth, goat, vijay 69

Share via: