2 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்... வெற்றி மகிழ்ச்சியில் வெற்றிமாறன்
09 Feb 2023
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் 'விடுதலை பார்ட் 1' படத்தில் இருந்து முதல் பாடலான 'உன்னோட நடந்தா' வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது
தனுஷின் குரல், பாடலாசிரியர் சுகாவின் வரிகள், அனன்யா பட்டின் குரல், வசீகரிக்கும் இசை போன்றவை இந்தப் பாடலை மேலும் பிடிக்கச் செய்திருக்கிறது.
பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே 2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.
'விடுதலை பாகம் 1' படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட, ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
https://www.youtube.com/watch?v=-wG_wCQFjY4
Tags: viduthalai, illaiyaraja, vetrimaran, elred kumar, dhanush