அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளி வைப்பு
01 Jan 2025
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசன்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக இப்படம் பொங்கலுக்கு வராது என்ற செய்தி பரவி வந்தது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் அந்த செய்திகளை உண்மையாக்கும் விதத்தில் படம் பொங்கலுக்கு வராது, தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
பொங்கல் தினத்தை ‘விடாமுயற்சி’யுடன் கொண்டாடுவோம் என்று காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தியைக் கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
Tags: vidamuyarchi, ajithkumar, trisha, anirudh, magizh thirumeni