வெளியானது 'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கள்
10 Sep 2024
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த்க நடித்திருக்கும் 'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற 'மனசிலாயோ...' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடலானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற பாடகர் 'மலேசியா' வாசுதேவனின் சக்திவாய்ந்த குரலால் உருவாக்கப் பட்டுள்ளது, மேலும் அவரது குரலுடன் யுகேந்திரன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரின் குரல்கள் சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் ஆகியோரது வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது.
அக்டோபர் 10,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பை இந்த முதல் பாடல் அதிகரிக்கும் என்று 'வேட்டையன்' குழு நம்புகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படம் பான்-இந்தியா சினிமா அனுபவத்தை அளிக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.
Tags: vettaiyan, rajinikanth, anirudh