'வீட்ல விசேஷம்', அனைவரையும் திருப்திப்படுத்தும் - ஊர்வசி

16 Jun 2022

ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வீட்ல விசேஷம்’.

‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்குப் பிறகு பாலாஜியின் அம்மாவாக இந்தப் படத்திலும் ஊர்வசி நடித்துள்ளார்.

இது குறித்து ஊர்வசி கூறுகையில்,

“வீட்ல விசேஷம்’ திரைப்படம் எனக்கு முழு திருப்தியைக் கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட  நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது. இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. 

நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களை செய்திருந்தாலும், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது. சத்யராஜ் சாருடன் திரையைப் பகிரும் வாய்ப்பு ஒரு முக்கியமான காரணம். நல்ல நடத்தை மற்றும் நடிப்பின் மூலமாக மற்றவ்ர்களை ஈர்க்கும் திறமை பெற்ற  நடிகர்களுடன்பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன், அப்படிபட்ட ஒரு நடிகர் சத்யராஜ். இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது. 

நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், RJ  பாலாஜி தான், அவருடைய படங்களில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரம் கிடைக்கும். RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர். மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பைப் பெற்று விடுவார். RJபாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும் போது, ​​NJ சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். திரைப்பட இயக்குநர்களின் இந்த கலவையானது படப்பிடிப்பின் போது குழுவில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் நிலைமையை சமமாக வைத்துக் கொண்டது.

சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்,” என்றார்.

Tags: veetla vishesham, rj balaji, saravanan, sathyaraj, oorvasi, aparna balamurali

Share via: