வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’.

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது, பிரதமரின் சென்னை வருகையின் போது ‘வலிமை அப்டேட்’ எப்போது என்ற குரல்கள் அடிக்கடி ஒலித்தது. ரசிகர்களின் இந்த அத்து மீறிய செயலுக்குப் பிறகு அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. 

அதன்பின் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ‘வலிமை’ பட முதல் பார்வையை தள்ளி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே..