சூர்யாவின் ‘வாடிவாசல்’ முதல் பார்வை வெளியீடு

23 Jul 2020

வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முதல் பார்வை இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

அந்த போஸ்டரை வெளியிட்டு சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு. 

இயக்குனர் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி முதல் முறையாக இணையும் படம் இது. படத்தின் தலைப்பே இது ஜல்லிக்கட்டு படம் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

சூர்யா தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் வெளியீடு கொரானோ ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாணு தயாரித்த ‘காக்க காக்க’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது தயாரிப்பில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வாடிவாசல்’.

தமிழக அரசு அனுமதி சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கியபின் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது

Tags: vadivasal, vetrimaran, suriya, gv prakashkumar

Share via:

Movies Released On June 23