பூஜையுடன் துவங்கிய “வடக்குப்பட்டி ராமசாமி” படப்பிடிப்பு
24 Jan 2023
தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி இணையும் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் கூறும்போது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரியில் தொலைநோக்குப் பார்வையுள்ள தயாரிப்பாளர்களான டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் இணைத் தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா ஆகியோர் தெலுங்கில் சிறந்த பொழுதுபோக்கு படங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளனர். நாங்கள் தமிழில் படங்கள் தயாரிக்க முடிவு செய்த போதும், இதே போன்று நல்ல கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களைக் கொடுக்க நினைத்தோம்.
உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சந்தானம் எந்தவொரு ஜானர் கதைக்கும் பொருந்திப் போகக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தோம். அப்போது தற்செயலாக நாங்கள் 'டிக்கிலோனா' படம் பார்த்துவிட்டு இயக்குநர் கார்த்திக் யோகியை சந்தித்தபோது அவர் ஒரு அற்புதமான கதையை எங்களுக்கு சொன்னார். 'வடக்குப்பட்டி ராமசாமி' பன்முக நடிகர் கவுண்டமணி நடிப்பில் வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பிரபலமான பெயர் அது." என்றார்.
சந்தானம் படத்தின் கதாநாயகனாக நடிக்க கதாநாயகி யார் என்பதை இறுதி செய்யும் பணியில் படக்குழு இருக்கிறது. ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை: சீன் ரோல்டன்,
ஒளிப்பதிவு: 'விட்னெஸ்' படப்புகழ் தீபக்,
படத்தொகுப்பு: சிவ நந்தீஸ்வரன்,
கலை இயக்குநர்: ராஜேஷ்,
நடன இயக்குநர்: ஷெரிஃப்
இன்று (ஜனவரி 24, 2023) படத்தின் பூஜை எளிமையாக நடந்துள்ளது. மேலும் 2023, கோடை மத்தியில் உலகம் முழுவதும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Tags: vadakkupatti ramasamy ,ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின்