அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் பான்-இந்தியபா படமாக உருவாகி வரும் படம் ‘டைகர் நாகேஷ்வரராவ்’. 

ரவி தேஜா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கான படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

1970களில் ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை அப்படியே பிரம்மாண்டமான செட் மூலம் உருவாக்கி வருகிறார்கள். இதற்காக 7 கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ஸ்டூவர்ட்புரத்தைச் சேர்ந்த பிரபல திருடனான டைகர் நாகேஷ்வரராவ்வின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் இப்படம் எடுக்கப்பட உள்ளது.

‘மகாநடி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய்’ உள்ளிட்ட பல படங்களக்கு தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றிய அவினாஷ் கொல்லா அந்த அரங்கம் அமைக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். 

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.