ரைசா வில்சன் படத்தின் பெயர் ‘தி சேஸ்’
01 Sep 2020
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்திற்கு ‘தி சேஸ்’ எனப் பெயர் வைத்து, இன்று படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிள் டிரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் இது. இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் 'சூர்ப்பனகை' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் குறுகிய காலத்திற்குள் இந்த 'தி சேஸ்' படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
'தி சேஸ்' கதைக் களத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளார்கள்.
படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரைப் பற்றிய படம், ஒரே இரவில் நடக்கும் கதையும் கூட.
படம் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் கார்த்திக் ராஜு.
ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார்.
Tags: karthik raju, raiza wilson, the chase