வைட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி, பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் படம் ‘தேஜாவு’.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இன்று அருள் நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் அதை வெளியிட்டார்கள்.

தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகநாக நடிக்கிறார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.