யுவி கிரியேஷன்ஸ், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். ஒரு போர் வீரனாக மாறுபட்ட தோற்றத்தில் சூர்யா இருக்கும் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்னும் இப்படத்திற்க பெயரிடப்படாத நிலையில் ‘சூர்யா 42’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். ‘வலிமை மிகு போர்வீரன்’ என்ற அடைமொழியுடன் இடம் பெற்றுள்ள மோஷன் போஸ்டர் இது ஒரு சரித்திர காலப் படம் என்பதைச் சொல்கிறது.

10 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத், ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கேஈ ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.