‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ இறுதிப் போட்டி

30 Oct 2020

கொரானோ தொற்று ஊரடங்கு காலத்திலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரசித்து வந்த நேயர்களுக்காக ‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ என்ற இசை நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வந்தது.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் பங்கேற்ற சில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில குழுக்களாக இணைந்து பாடினர். 

திவாகர், சாய்சரண், சந்தோஷ், மாளவிகா, ஹரிப்ரியா, செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, சக்தி, பிரவீன், நவீன் சாம்சன், சீனிவாசன், மனோஜ்குமார், சாம்விஷால், ஸ்ரீநிஷா, சுதன்குமார், வாகு, ஷிவாங்கி, அஜய், ஷரத், ரங்கப்ரியா, அபர்ணா, விக்ரம், விஜய் ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 

இறுதிப் போட்டியில் பாடும் நிகழ்ச்சி தவிர நடன நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர், அவரது மனைவி சுஹாசினி ஆகியோரின் சிறப்பு நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

Tags: vijay tv, super singer, super singer champion of champions

Share via: