எஸ்பிபி - நம் உயிருடன் கலந்த குரல்

25 Sep 2020

எஸ்பிபி, இந்த மூன்று எழுத்துக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் உயிரிலும் கலந்த ஒன்றாகவே இருந்தது, இருக்கப் போகிறது, இன்னும் இசை உள்ள காலம் வரையும் இருக்கும்.

1966ல் தெலுங்கு சினிமாவில் பாட ஆரம்பித்தவர் கடந்த 54 வருடங்களாக பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அவருடைய வசீகரக் குரல் பல ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது.

எத்தனையோ இசையமைப்பாளர்கள், வளரும் இசையமைப்பாளர்கள் ஆகியோரது இசையில் பாடியுள்ளார். அவருடன் இணைந்து எத்தனையோ பாடகர்களும், பாடகிகளும் பாடியுள்ளார்கள்.

தமிழானாலும், தெலுங்கானாலும், கன்னடமானாலும், ஹிந்தியானாலும் அந்த மொழியில் புலமை பெற்றவர் போல உச்சரிப்பில் மிகவும் கவனம் செலுத்திப் பாடுவார்.

மற்ற மொழி தெரியாவர்கள் கூட அவர் குரலுக்காகவே அந்தப் பாடல்களை கேட்டு ரசித்ததும் உண்டு.

அவருடைய மறைவுக்கு எத்தனையோ பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுடன் கடை கோடி ரசிகன் கூட அவருடைய மறைவுக்காக இன்று நிச்சயம் கண்ணீர் சிந்தியிருப்பார்.

எஸ்பிபியின் குரல் இந்த காற்று உள்ள வரையிலும், இந்த இசை உள்ள வரையிலும் ஒவ்வொரு வினாடியும் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவ

Tags: spb, sp balasubramaniam, tamil cinema

Share via: