சூரரைப் போற்று - சினிமா பிரபலங்கள் பாராட்டு
12 Nov 2020
2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் பலர் நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நேற்று இரவு வெளியான இப்படத்தை உடனடியாக பல சினிமா பிரபலங்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாது அனைவரும் படத்தை வியந்து பாராட்டி உள்ளனர். தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது மற்ற மொழி சினிமா பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தடம் பதித்த பல படங்களைக் கொடுத்த இயக்குனர் பாரதிராஜா படம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
சுதா கொங்காரா இயக்கத்தில்
G v பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்.
மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்
பாராட்டுகளும்
வாழ்த்துக்களும்.
அன்புடன்
பாரதிராஜா.
இதுவரையில் ஓடிடி தளங்களில் வெளிவந்த படங்கள் நல்ல தரமான படங்களாக இல்லை என்று பலரும் கூறி வந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ அனைத்து ரசிகர்களும் பார்க்கும் ஒரு படமாக உள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்களும் பாராட்டி வரு
Tags: soorarai potru, Sudha Kongara, sooriya, Aparna Balamurali, GV Prakash Kumar