‘சைலன்ஸ்’ ஆனது ‘நிசப்தம்’, அக்டோபர் 2ல் ஓடிடி ரிலீஸ்
18 Sep 2020
ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில், அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சைலன்ஸ்’.
இப்படத்திற்கு முதலில் ‘நிசப்தம்’ என பெயர் வைத்து, படத்தின் முதல் பார்வை, டீசர் ஆகியவற்றையும் வெளியிட்டார்கள்.
ஆனால், இப்போது திடீரென ‘சைலன்ஸ்’ எனப் பெயர் மாற்றிவிட்டார்கள்.
இப்படம் அக்டோபர் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த சில மாதங்களாகவே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அடிக்கடி செய்திகள் வந்தன. ஆனால், இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
முற்றிலும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இப்படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாதவராக அனுஷ்கா நடித்துள்ளார்.
அக்டோபர் 30ம் தேதி அமேசான் தளத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படமும் வெளியாக உள்ளது
Tags: Nishabtham, Madhavan, Anushka, Anjali, Shalini Pandey, Nisabtham, silence