சேது திடீர் மறைவு - நண்பரின் வேண்டுகோள்

27 Mar 2020

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் டாக்டர் சேது. 

‘வாலிபராஜா,  சக்க போடு போடு ராஜா, 50 50, ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார்.

37 வயதே ஆன சேதுவின் அகால மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருக்குப் பழக்கமில்லாத பல நடிகர்கள், நடிகைகள் கூட இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை நடந்தது. நடிகர் சந்தானம் கலந்து கொண்டு நண்பனின் சடலத்தை தூக்கிச் சென்றார். அதன் வீடியோக்கள் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

இதனிடையே, சேதுவின் நெருங்கிய நண்பரான டாக்டர் அஷ்வின் விஜய் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராமில், “சேது, நீயில்லாமல் எனது வாழ்க்கை அப்படியே இருக்காது. எனது வாழ்நாளில் மிகவும் வலி மிகுந்த நாள். 30 வருட நட்பு, சகோதரத்துவம். இந்த உலகத்திற்கும் இளைஞர்களுக்கும் மகிழ்ச்சியும், நல்லதை மட்டுமே எங்களது பார்வையாக இருந்தது. நீ மறைந்தபின் என்னிடமிருந்த ஒரு பகுதியை எடுத்துச் சென்றுவிட்டார். அது எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும். மக்களுக்கு ஒரு சிறிய வேண்டு கோள். அவர் மாரடைப்பால் மட்டுமே மரணமடைந்தார், கொரானோவால் அல்ல. தயவு செய்து தவறான வதந்திகளை இந்நேரத்தில் பரப்பாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டு

Tags: sethu, sethuraman, dr sethuraman

Share via: