செல்வராகவனால் சிக்கலில் படக்குழு
24 Jul 2024
செல்வராகவனால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது ராஜுமுருகன் – சசிகுமார் படக்குழு.
’ஜப்பான்’ படத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் ராஜுமுருகன். இதில் சாய்த்ரா அச்சர் நாயகியாக நடித்து வருகிறார். அம்பேத்குமார் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு அட்வான்ஸ் தொகையும் போடப்பட்டு படப்பிடிப்புக்கான தேதியும் குறிக்கப்பட்டது. ஆனால், அவருடைய காட்சியின் படப்பிடிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு இதிலிருந்து விலகிக் கொள்வதாக படக்குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, இப்போது இப்படி செய்தால் எப்படி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். தற்போது செல்வராகவனுக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.
செல்வராகவன் பதிலாக வேறொரு நடிகர் ஒப்பந்தமாகி வரும் வரை, வேறு காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
Tags: selvaragavan