விஷால் நடித்த ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து கார்த்தி நடிக்க உள்ள ‘சர்தார்’ படத்தை இயக்குகிறார்.

இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளையும், கதிர் அரங்க அமைப்பையும் செய்கிறார்கள். யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுத, பொன் பார்த்திபன், ரோஜு, பிபின் ரகு எழுத்தில் உருவாகி வரும் படம் இது.

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’, த்ரிஷா நடித்த ‘மோகினி’, கார்த்தி நடித்த ‘தேவ்’ ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.