பெரிய பொருட்செலவில் உருவாகும் ‘சர்தார் 2’

23 May 2024

கார்த்தியின் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய முதலீட்டில் ‘சர்தார் 2’ உருவாகவுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’. உளவாளி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.

தற்போது ‘சர்தார் 2’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான கதைகளத்தினை கார்த்தியை சந்தித்து கூறிவிட்டார் மித்ரன். அவருக்கும் கதை ரொம்பவே பிடித்துள்ளது. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்புக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் கார்த்தி.

பல்வேறு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக அஜர்பைஜான், கஜகஸ்தான், ஜார்ஜியா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்தியின் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய முதலீட்டில் ‘சர்தார் 2’ படத்தினை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் கார்த்தியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Tags: sardar 2, karthi

Share via: