ஆர்ஆர்ஆர் - தமிழ்நாட்டில் வெளியிடும் லைக்கா
17 Feb 2021
ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.
‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கி வரும் இந்த பிரம்மாண்டப் படம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராவதாகச் சொல்லப்படுகிறது.
டிவிவி என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 13ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
தமிழ்நாடு உரிமையை பெரும் விலை கொடுத்து அந்நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: rajamouli, maragathamani, samuthirakani, ram charan, jr ntv, rrr