மூன்றாவது முறையாக இணையும் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி

21 Jan 2023


‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்கள் மூலம் மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட திரைப்படங்கள்  உருவாக்கத்தில் உள்ளன. 

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும்.

படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.
 

Tags: sathyajyothi, ராம்குமார் , விஷ்ணு விஷால்

Share via: