ரஜினிகாந்த் 169வது படத்தை இயக்கும் நெல்சன்

10 Feb 2022

ரஜினிகாந்த் நடிக்கப் போகும் 169வது படத்தை யார் இயக்கப் போவது என்பது குறித்து பல்வேறு இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டன. கடந்த சில நாட்களாகவே அந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் இன்று மாலை படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் ’பீஸ்ட்’ படத்தை இயக்கி வருபவருமான நெல்சன் திலீப்குமார் தான் ரஜினிகாந்த் 169வது படத்தின் இயக்குனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், தேசிங் பெரியசாமி ஆகியோரில் ஒருவர்தான் ரஜினியின் 169வது படத்தை இயக்கப் போட்டியில் இருந்தார்கள். தற்போது அந்தப் போட்டியில் இடம் பெறாத நெல்சன் இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் 169வது பட அறிவிப்பு வந்ததையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Tags: rajinikanth, nelson, anirudh, sun pictures, rajinikanth 169

Share via: